Seed Certification
விதை கிராமத் திட்டம்
விதை கிராமம்

விதை கிராமங்கள் ஏற்படுத்துதல்:
தற்போது விதை கிராமத் திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.I. பல பயிர்களின் விதை உற்பத்தி:

விதை கிராமத்தின் நோக்கம் உற்பத்தி செய்கின்ற விதைகள் அடிப்படை விதையாகவும், சான்று பெற்ற விதையாக இருக்க வேண்டும். பயிரிடத் தேவையான இடத்தை தேர்ந்தெடுத்து அதில் ஒரே இரகமான பயிரை பயிரிட வேண்டும்

தேர்வு செய்ய வேண்டிய இடம்:
  • நீர் பாசனம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும்
  • ஒரு பருவக் காலத்திற்கு மேல் தகுந்த தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு பயிரை பயிரிட வேண்டும். வேலை ஆட்கள் தேவைப்படும்
  • குறிப்பிட்ட பயிரைப் பற்றிய முழுவிவரமும் விவசாயிகள் தெரிந்திருக்க வேண்டும்
  • பூச்சி மற்றும் நோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்
  • பயிரிட்ட முந்தைய இடம், தற்போது விதை பயிரிட ஏற்றவாறு இருக்க வேண்டும். சராசரியான மழை இருக்க வேண்டும்
  • விதை மற்றும் இதர இடுப்பொருள் பரிமாற்றத்திற்காக நகர் புறம் அருகில் இருக்க வேண்டும்

விதை விநியோகம்: விஞ்ஞானிகள், விதை உற்பத்திற்காக தகுந்த இடத்தை அடையாளம் காட்டுகின்றனர். ஆதரவு தொகையாக 50% குறிப்பிட்ட விவசாயிகளுக்கு பல்கலைக்கழக விவரச் சீட்டு அடங்கிய விதைகளை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தரமான விதைகளை தங்களுடைய விவசாய நிலத்தில் தங்கள் சொந்த உபயோகத்திற்காக விதைகளை உற்பத்தி செய்கின்றனர். நெல், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைகளை உற்பத்தி செய்கின்றனர்.

கொள்திறன் அமைப்பு: தொழில்நுட்பம் மற்றும் சமூக பங்கேற்ப்புக்கான இணைப்பை பலப்படுத்த நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளின் கொள்திறன் அதிகப்படுத்த சிறப்பு வழியுறுத்தல் வழங்கப்படுகிறது.விவசாயிகளினுடைய தொழில்நுட்ப அதிகாரம் அளித்ததற்காக விதைக் கிராமங்களின் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு விதை உற்பத்தி மற்றும் விதை தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி காலம்   :   3 நாட்கள்

முதல் ஒரு நாள் பயிற்சி

:    விதைக்கும் பொழுது
பயிற்சிகள் தடுப்பு இடைவெளி, விதைப்பு முறைகள், விதை   நேர்த்தி, மற்ற உழவியல் சார்ந்த முறைகள்
இரண்டாவது ஒரு நாள் பூக்கும் பொழுது
பயிற்சிகள்      மாறுபட்ட வகைகளை அறிந்து அகற்றுதல்,  விதை   நிலத்தை பராமரித்தல், பயிர் பாதுகாப்பு நடவடிக்கை, முழு வளர்ச்சியடைந்த நிலை, அறுவடை முறைகள்
மூன்றாவது ஒரு நாள் அறுவடைக்கு பிறகு
பயிற்சிகள்  விதை சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், விதை நேர்த்தி செய்தல், பொதிகட்டுதல், சேமிப்பு முறைகள், விதை மாதிரி எடுத்தல், விதை சோதனை நிலையத்திற்கு அனுப்புதல்.
தமிழ்நாட்டில் விதை கிராம நிகழ்ச்சி:
தரமுள்ள விதைகளை உற்பத்தி செய்யவும் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதைக் கிராமத் திட்டத்தை அரசு உதவியுடன் இயங்கும் மூன்று ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 13 - வேளாண் அறிவியல் நிலையங்களின் மூலம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam